ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘விலையில்லா விருந்தகம்’ திறந்த தவெகவினர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக சார்பில் ‘விலையில்லா விருந்தகம்’ திறக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ‘விலையில்லா விருந்தகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தை அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக் துவங்கி வைத்தார்.
இந்த உணவகத்தில் தினமும் 300 நபர்களுக்கு 'விலையில்லா உணவு' வழங்கப்படும் என
கார்த்திக் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் தொகுதிகளைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
கடந்த சில நாட்களாவே தவெக சார்பில் ஆங்காங்கே இலவச டீக்கடைகளும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடும் கட்டித்தரப்படுகிறது.