For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!

12:55 PM Dec 02, 2023 IST | Web Editor
ஆதித்யா  எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்  இஸ்ரோவின் புதிய அப்டேட்
Advertisement

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-வது கருவி செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

Advertisement

சூரியனின் வளி மண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பூமியிலிருந்து சுமார்15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. அதன் பிறகு, ஆதித்யா எல்1 விண்கலத்தின் மூன்று கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

அது போல், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 16 நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக உயர்த்தப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், ஆதித்யா-எல்1-லிருக்கும் STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கி.மீ.தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட்டது.

இந்த ஆய்வு முடிவுகளை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி அதன் பாதையில் செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதாவது, விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளது என்றும் ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் தகவல் இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement