For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அக்குபஞ்சர் முறையில் பிரசவம்? தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!

09:46 AM Feb 22, 2024 IST | Web Editor
அக்குபஞ்சர் முறையில் பிரசவம்  தாய்  குழந்தை உயிரிழந்த சோகம்
Advertisement

கேரளாவில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க முயன்றதில்,  தாயும்,  குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

நயாஸ் என்பவர் திருவனந்தபுரத்தின் சுரக்காமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷமீரா பீவி கர்ப்பிணியாக இருந்த போது உரிய மருத்துவ கவனிப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  அக்குபஞ்சர் பயிற்றுநரிடம் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், ஷமீரா பீவிக்கு கடந்த 20 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை | பயண திட்டம் வெளியீடு!

இதையடுத்து,  அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு ஷமீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரும் அவரது குழந்தையும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்தச் சம்பவம் தொடர்பாக கணவர் நயாஸை காவல் துறை கைது செய்தது விசாரணை நடத்தி வந்தனர்.

ஷமீராவுக்கு இது நான்காவது பிரசவமாகும்.  நயாஸ் தனது மனைவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற கடந்த 9 மாதமாக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என அப்பகுதி வார்டு கவுன்சிலர், ஆஷா பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கவுன்சிலர் தீபிகா கூறுகையில், "கர்ப்பிணியாக இருந்த ஷமீராவைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் அனுமதி அளிக்கவில்லை.  ஒருமுறை வீட்டுக்குள் சென்று அவரிடம் விசாரித்தோம்.  அப்போது, 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக அவர் கூறினார். ஷமீராவுக்கு முதல் மூன்று குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன.  மூன்றாவது குழந்தை ஓராண்டுக்கு முன்புதான் பிறந்தது.  இந்நிலையில், இயற்கையான பிரசவத்துக்கு அவருக்கு வாய்ப்பே இல்லை.  நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டாலும், மிகவும் அச்சத்துடன் ஷமீரா பேசினார்.  இயற்கையான பிரசவம் நடக்க விரும்பிய நயாஸ், தனது மனைவியை மருத்துவமனைக்கு ஒருமுறை கூட அழைத்துச் செல்லவில்லை" என்றார்.

Tags :
Advertisement