Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்!

07:27 PM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Advertisement

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி கடந்த 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்ததார். பின்னர் 2005-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அதன்பிறகு, சந்திரசேகரராவின் அப்போதைய டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யான விஜயசாந்தி, 2014ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், எதிர்வரவுள்ள தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்த்திருந்து காத்திருந்த விஜயசாந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர், நேற்றைய தினம் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடனிருந்தனர்.

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPBRSCongressElectionElection 23News7Tamilnews7TamilUpdatesVijaya Shanthi
Advertisement
Next Article