For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'Stop' என்பது பவர்புல்லான வார்த்தை.. இத்தோடு நிறுத்திவிடுங்கள்.. - நடிகை #Simran பதிவு!

08:52 PM Sep 22, 2024 IST | Web Editor
 stop  என்பது பவர்புல்லான வார்த்தை   இத்தோடு நிறுத்திவிடுங்கள்     நடிகை  simran பதிவு
Advertisement

'Stop' என்பது பவர்புல்லான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என நடிகை சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

கமல், விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார். 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபமாகச் சமூகவலைத்தளங்களில் சிம்ரன் பற்றிய வதந்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தன்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று சிம்ரன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

"உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும் படியாகச் சிலர் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கையில் மனவருத்தமாக இருக்கிறது. என் திரையுலக வாழ்வில் இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படியான விஷயங்களைக் கடந்து சென்றுவிடுவேன். ஆனால் இப்போது என்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை நான் எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்போது என் இலக்குகள், என் வாழ்க்கை எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன. சமூகவலைத்தளங்களில் என் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்.

'Stop' என்பது பவர்புல்லான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன். இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கப்போவதில்லை. நாம்தான் நமக்காகக் குரல் கொடுத்தாக வேண்டும். எனக்காக நான்தான் பேசியாக வேண்டும். நம் சினிமா துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
Advertisement