நடிகை ராதிகாவின் தாயார் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!
பிரபல நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாரும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா, நேற்று வயது மூப்பின் காரணமாகக் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீதா ராதாவின் உடல், போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் மனைவியும், திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களின் தாயாருமான திருமதி. கீதா ராதா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன் . பாசமிகு தாயாரை இழந்து வாடும் ராதிகா அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.