For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு!

04:04 PM Oct 25, 2023 IST | Jeni
இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு
Advertisement

டெல்லியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோனை சந்தித்த நடிகை கங்கனா ரணாவத்,  இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் குறித்து உரையாடினார்.

Advertisement

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து வருகிறது. இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.  முன்னதாக நடைபெற்ற தாக்குதல்களில்,  காஸா பகுதியில் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுவரை இருதரப்பிலும் 7000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை கங்கனா ரணாவத்,  டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதர் நோர் கிலோனை சந்தித்து,  இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் குறித்தும், இஸ்ரேலில் உள்ள சூழ்நிலை குறித்தும் விரிவாக உரையாடினார்.  மேலும் தனது அடுத்த படமான ‘தேஜஸ்’ பற்றியும் நோர் கிலோனுடன் கங்கனா கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து கங்கனா ரனாவத் தனது X தள பக்கத்தில், “இஸ்ரேலை நினைத்து எனது மனம் அனுதாபப்பட்டுகிறது. எங்களின் இதயங்களிலும் ரத்தம் வழிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதனுடன் அவர் இணைத்துள்ள வீடியோ பதிவில், “இந்த படுகொலைகள் நிகழ்வதற்கு முன்பே இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் ஆதரவாக நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்துக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாரதத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் என நம்புகிறோம். அதேபோல யூதர்களும் அவர்களுக்கான தேசத்திற்கு தகுதியானவர்கள். நீங்கள் உங்களின் உரிமைக்காக போராடுகிறீர்கள். ஒரு இந்து தேசமாக, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்” என்று நோர் கிலோனிடம் கங்கனா கூறினார்.

இதையும் படியுங்கள் : பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ - திருத்தம் செய்ய NCERT குழு பரிந்துரை..!

தொடர்ந்து இந்தியில் அவர் பதிவிட்டுள்ள X தள பதிவில், “இன்று முழு உலகமும், குறிப்பாக இஸ்ரேலும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு வருகின்றன. நேற்று நான் ராவண வத நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றபோது, இஸ்ரேல் தூதரகத்திற்கு வந்து இன்றைய நவீன ராவணனையும், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும் வீழ்த்தும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு குழந்தைகளும் பெண்களும் குறிவைக்கப்படும் விதம் நெஞ்சை பதற வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement