For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜய்யின் #TheGoat | பூஜை...முதல் ரிலீஸ்...வரை!

09:15 AM Sep 05, 2024 IST | Web Editor
நடிகர் விஜய்யின்  thegoat   பூஜை   முதல் ரிலீஸ்   வரை
Advertisement

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த The GOAT திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் பூஜை முதல் வெளியீடு வரை கடந்து வந்த பாதை குறித்து காணலாம்....

Advertisement

விஜய் நடிப்பில் அவரது 67-வது படமாக வெளியான ‘லியோ’வை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்களை “LCU" (Lokesh Cinematic Universe) என்ற வரிசையில் இயக்கி வந்தார். கைதி, விக்ரம் வரிசையில் லியோ படமும் LCU வரிசையில் இடம் பெற்றது. அதே போல், மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்-லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக ஒன்று சேர்ந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், லியோ வெளியாகி 25 நாட்களில் ரூ.600 கோடி வசூலை குவித்தது.

A Venkat Prabhu's Investigation "The GOAT"

தொடர்ந்து “லியோ 2” திரைப்படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவில்லை. இந்த சூழலில் தான் “தளபதி 68” அதாவது நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்தியாசத்தை எதிர்பார்ப்பது ரசிகர்கள் இயல்பு என்றே கூறலாம். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை திரையில் காட்டுவதுடன், வைப் செய்யும் பாடல் ஒன்றையும் கொடுப்பது வெங்கட் பிரபு வழக்கம்.

அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இத் திரைப்படத்திற்கு The Greatest of All the Time (GOAT) என பெயரிடப்பட்டது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் உடன் பல்வேறு தகவல்களும் வெளியாகின. விஜய்க்கு ஜோதிகா ஜோடியாக நடிக்கவுள்ளார், இந்த திரைப்படமே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என பல தகவல்கள் வெளியாகின. அதில் சில தகவல்கள் உண்மையாகவும் இருந்தது.

"தி கோட்” Cast:

இத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம் தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

"தி கோட்” படப்பிடிப்பு:

விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால் இதற்கான De-aging பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்கா சென்றனர். முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், கத்தி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, கேரளாவின் திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது.

“The GOAT" Update

கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து கடந்த 3-ம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6-ம் தேதி பிரசாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படமும் அந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

"The GOAT" Trailer:

இன்று நாளை என்ற இழுபறிக்கு மத்தியில் கடந்த ஆக. 17-ம் தேதி தி கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வரவேற்பு என்றால் ஒரே நாளில் சுமார் 2 கோடி பார்வையாளர்களை கடந்தது. இதில் ஒரு சிக்கலும் எழுந்தது. என்னவென்றால், தமிழ் ட்ரெய்லரில் இடம் பெறாத ஒரு காட்சி மற்ற மொழி ட்ரெய்லர்களில் இடம்பெற்றுள்ளது.

தமிழில் வெளியான ட்ரெய்லரில் “மருதமலை மாமணியே முருகையா..” என்ற பாடலை விஜய் பாடியவாறு காட்சிகள் நிறைவு பெறுகின்றன. இந்த பாடலை கில்லி படத்தில் விஜய் ஒரு காட்சியில் பாடி இருப்பார். அதனை ரெஃபரன்ஸாக வைத்து மீண்டும் அதே பாடலை ட்ரெய்லரில் இடம் பெற செய்துள்ளனர். ஆனால் மற்ற மொழிகளான இந்தி மற்றும் தெலுங்கில் வேறொரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெயராம் விஜய்யுடன் போனில் பேசும்போது பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து விட்டனர். பிளான் பி ஏதேனும் வைத்துள்ளாயா? என்று கேட்கிறார். இதற்கு பதில் அளித்த விஜய் பிளான் பி மட்டுமல்ல, பிளான் இசட் வரைக்கும் நான் வைத்துள்ளேன் என்று கிண்டலாக கூறி, பின்னர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் பட தீம்மை பாடுவார். இந்த காட்சியும் மற்ற மொழி ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழில் மட்டுமே பார்த்தவர்கள் மீண்டும் தெலுங்கு ஹிந்தி ட்ரெய்லரை பார்த்தனர்.

ட்ரைலரை பார்க்கையில், ரா உளவுப் பிரிவில் வேலை பார்க்கும் விஜய்க்கு நீண்ட ஆண்டுகள் கழித்து அவர் வேலை பார்த்தது தொடர்பாக பிரச்னை வருவதாகவும் அந்த பிரச்னையிலிருந்து அவரை அவரது மகன் எப்படி தப்பிக்க வைத்தார் என்பதையும் சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லர் ஜானரில் சொல்லியிருப்பது போல் அமைந்துள்ளது.

மேலும் அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் இடம்பெற்ற வசனம் போல் ‘இனிமே சத்தியமா குடிக்கக்கூடாதுடா…’ என்ற வசனம் இடம்பெறுகிறது. அதே போல் விஜய்யின் கில்லி படத்தில் இடம்பெற்ற காட்சி போல், இதிலும் ஒரு காட்சி வருகிறது. அதோடு ‘சிங்கம் எப்போதும் சிங்கம் தான்’ மற்றும் விஜய்யின் ஹிட் டயலாக்கான ‘ஐ எம் வெய்டிங்’ வசனம் ட்ரைலரின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

கமர்ஷியல் படம் தான்:

ட்ரைலர் வெளியீட்டு விழாவில், விஜய் தனது கட்சிக்கொடியை வெளியிட இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியதற்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற வகையில் பல விதமான கேள்விகள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்டன. விஜய்யின் அரசியலுக்கும் இந்தப் படத்திற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, இது முழுக்க முழுக்க அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான ஒரு கமர்ஷியல் படம் என்று திட்டவட்டமாக வெங்கட் பிரபு தெரிவித்தார்.

இசைவெளியீட்டு விழா இல்லாத “தி கோட்”!

விஜய் தனது கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வருவாரா? தி கோட் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் பொதுவாக விஜய் படங்கள் வெளியானால் அதற்கு அரசியல்ரீதியான எதிர்ப்புகள் வருவது வழக்கம். தற்போது விஜய் அரசியலுக்கும் வருவதால் தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசியல்ரீதியிலான நெருக்கடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இன்னும் விஜய்யிடமே இசை வெளியீட்டு விழா குறித்து பேசவில்லை எனவும், அவரிடம் கேட்டு ஆடியோ லாஞ்ச் இருக்கா? இல்லையா? என்று இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிடுவோம் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். ஆனால், தி கோட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவே நடைபெறவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது....

Advertisement