For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.81 கோடி வசூல்!

01:11 PM Jun 25, 2024 IST | Web Editor
நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் 10 நாட்களில் ரூ 81 கோடி வசூல்
Advertisement

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'மகாராஜா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.  இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது.  குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தில் அனுராக் காஷ்யப்,  மம்தா மோகன்தாஸ்,  நட்டி, முனிஷ்காந்த்,  சிங்கம் புலி,  பாரதிராஜா,  வினோத் சாகர்,  பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி! – உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் டெல்லி அமைச்சர் அதிஷி!

இந்த திரைப்படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்,  படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement