For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TvkFlagஐ மீனாட்சியம்மன் காலடியில் வைத்து பூஜை செய்த நடிகர் - விஜய்க்கு கொடுக்கப் போவதாக பேட்டி..!

09:46 PM Aug 23, 2024 IST | Web Editor
 tvkflagஐ மீனாட்சியம்மன் காலடியில் வைத்து பூஜை செய்த நடிகர்   விஜய்க்கு கொடுக்கப் போவதாக பேட்டி
Advertisement

த.வெ.க. கொடியை மதுரை மீனாட்சியம்மன் காலடியில் வைத்து நடிகர் சௌந்தரராஜா பூஜை செய்தார். 

Advertisement

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து ஓரளவுக்கு அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று காலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும், நடிகர் விஜய் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும் சௌந்தரராஜா தவெக கொடியை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளார். விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனையும், பூஜையும் செய்து கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

சிறப்பு பூஜையை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.

மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்ட தவெகவின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement