For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்? வெளியான அப்டேட்!

02:30 PM Mar 27, 2024 IST | Web Editor
நடிகர் சித்தார்த்   அதிதி ராவ் திருமணம்  வெளியான அப்டேட்
Advertisement

நடிகர் சித்தார்த்துக்கும்,  நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.  

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.  இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் இருந்த இவர்,  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான  'ஆயுத எழுத்து' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  தொடர்ந்து,  இவர் அருவம்,  சிவப்பு மஞ்சள் பச்சை,  டக்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  சமீபத்தில் இவர் நடித்த சித்தா படம் பெரிதும் பேசப்பட்டது.  இதற்கிடையே  இவர், நடிகை அதிதி ராவ் ஹைதரியைக் காதலித்து வந்தார்.

நடிகை அதிதி ராவ் காற்று வெளியிடை,  செக்க சிவந்த வானம்,  ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.  இவர்கள் இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன்,  இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த்துக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது.  ஆனால், இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags :
Advertisement