உடல் நலக்குறைவால் நடிகர் ராஜேஷ் காலமானார்!
நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
10:17 AM May 29, 2025 IST | Web Editor
Advertisement
'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ்.
Advertisement
150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த அவர் இன்று காலமானார். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு வயது (75).