For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கவிதை தொகுப்பை வெளியிட இருக்கும் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ்!

09:11 PM Jul 11, 2024 IST | Web Editor
கவிதை தொகுப்பை வெளியிட இருக்கும் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ்
Advertisement

நடிகர் பிரணவ் மோகன்லால் தன் முதல் கவிதை தொகுப்பை ‘லைக் டெசர்ட் டியூன்ஸ் (like desert dunes)’ என தலைப்பிட்டு வெளியிட உள்ளார்.

Advertisement

நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் 'ஹிருதயம்' திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, 'வர்ஷங்களுக்கு ஷேஷம்' திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். குறைவான திரைப்படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

இந்நிலையில், பிரணவ் தன் முதல் கவிதை தொகுதியை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ‘லைக் டெசர்ட் டியூன்ஸ் (like desert dunes)’ என புத்தகத்திற்குத் தலைப்பு வைத்துள்ளார். மோகன்லாலில் மகள் விஸ்மயாவும் கவிஞராக அறியப்படுகிறார். 2021-ல் அவர் எழுதிய கவிதைகள் கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (grains of stardust) என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement