For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நடிகர் நாகர்ஜுனா!

09:31 PM Jun 26, 2024 IST | Web Editor
ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நடிகர் நாகர்ஜுனா
Advertisement

தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட ரசிகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் நடிகர் நாகர்ஜுனா. 

Advertisement

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'குபேரா'. சேகர் கம்முலா இயக்கும் இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளது அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஐதராபாத் விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது நாகர்ஜுனா நடந்து வருகையில் ஏர்போர்ட்டில் பணியாற்றும் ரசிகர் ஒருவர் நாகர்ஜுனாவை காண நெருங்குகிறார்.

இதையும் படியுங்கள் : “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

ஆனால் நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை நாகர்ஜூனாவை நெருங்க விடாமல் பிடித்து தள்ளி விடுகிறார். இது தொடர்பான வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தள பதிவில் விமான நிலைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில் அவர், "இந்த விவகாரம் இப்போது தான் என் கவனத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட ரசிகரை விமான நிலையத்தில் நேரில் நாகார்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, தனது பாதுகாவலர் அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement