For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#HemaCommitteeReport | நடிகர் முகேஷ் கைது செய்து விடுவிப்பு!

02:41 PM Sep 24, 2024 IST | Web Editor
 hemacommitteereport   நடிகர் முகேஷ் கைது செய்து விடுவிப்பு
Advertisement

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Advertisement

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம் சாட்டினார். இதையடுத்து, வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார். இதேபோல ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல்ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : “2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்” | பிரதமர் #Modi -க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின்  அடிப்படையில் நடிகர் சித்திக் , இயக்குநர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாட்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்குள்ளன நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். ஆனால், அதே நேரம், கேரள நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து கொச்சியில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணைக்குப் பின் நடிகர் முகேஷை விடுவித்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக அழைத்தால் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, நடிகர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

Tags :
Advertisement