Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்" - #Ajithkumar-க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

10:44 AM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித் குமார், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார். இதன்படி துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். இதற்காக, அஜித்குமார் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் தனியாக ஒரு அணியை நிர்வகித்து வரும் நடிகர் அஜித்குமார் அந்த அணி சார்பில் Fabian Duffieuxwill-ஐ அதிகாரப்பூர்வ ஓட்டுநராக அறிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு F3 கார்பந்தயத்திலும், 2010-ம் ஆண்டு பார்முலா 2 கார்பந்தயத்திலும் அஜித் பங்கேற்றார். அண்மையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் அஜித் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் : தீபாவளி தீப உற்சவம் | 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் #Ayodhya ராமர் கோயில்!

இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருக்கும் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"வாழ்த்துகள் அஜித் சார். உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன் மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு நன்றி. விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்"

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
actorajithCar RaceDubaiMinisterNews7Tamilnews7TamilUpdatesTamilNaduUdhayanidhiStalin
Advertisement
Next Article