For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிரீஸ் நாட்டில் அதிரடி திட்டம்! இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை!

09:26 PM Jul 05, 2024 IST | Web Editor
கிரீஸ் நாட்டில் அதிரடி திட்டம்  இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை
Advertisement

கிரீஸ் நாட்டில் வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

Advertisement

பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை  என்ற திட்டத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ள நேரத்தில், கிரீஸ் நாட்டில்  6 நாள் வேலை திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜுன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது. குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள், உற்பத்தித் துறைகள் அல்லது வணிக நிறுவனங்கள் தொடர்ந்து 24 மணி நேரம் இயங்கவும், வாரத்தில் 7 நாட்கள் பணியாற்றவும் சில விதிவிலக்குகளுடன் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த புதிய சட்டம் குறித்து கன்சர்வேடிவ் தொழிலாளர் துறை அமைச்சர் கூறுகையில், "தற்போதிருக்கும் தொழிலாளர்களைக் கொண்டு திடீரென ஏற்பட்ட கூடுதல் வேலைப்பளுவை சரிகட்ட முடியாத வேலைகளில், தொழில் நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால், தொழிலாளர்களுக்கு கூடுதல் பணமும் கிடைக்கும்.  இந்த சட்டப்படி, கூடுதலாக பணியாற்றும் 6வது நாளுக்கு 40 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், இந்த சட்டம் வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் என்ற கொள்கையை ஒருபோதும் பாதிக்காது" என்றார்.  இந்த புதிய சட்டத்திற்கு அந்நாட்டு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement