"பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - திருமாவளவன் பேட்டி!
மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "உலகத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது என்பதை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற பாஜக அரசு 2029ல் பதவி காலத்தை நிறைவு செய்யும். ஆனால் அடுத்த கணக்கெடுப்பு 2031 நடைபெறும் என தெரிய வருகிறது. 2021ல் நடைபெற வேண்டியது கொரோனா காரணமாக 2031 ஆம் ஆண்டு தான் அந்த காலக்கெடு வருகிறது.
அப்போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. 29 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் உறுதியாகும். இப்போது இவர்கள் இந்த அறிவிப்பை செய்துதிருப்பது ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிகிறது. பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இது ஒரு பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை செய்து வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சரவையில் பாஜக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சில கட்சிகள் மாநில அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது என்பதை விசிக சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் வைஷ்ணவ் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் மாநில அரசு தான் இதை மேற்கொள்ள வேண்டும் என சொன்னவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துகிற பாஜகவை கண்டித்து வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பெஹல்காம் நகரில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விரைந்து தாயகம் திரும்பியவர். டெல்லிக்கு வந்து அமைச்சரோடு கலந்தாய்வு நடத்திவிட்டு பீகாரர்க்கு சென்று விட்டார் என்பது அதிர்ச்சி இருக்கிறது. அந்த பயங்கரவாதத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது பயங்கரமாக கண்டிக்கிறோம் என் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அதை காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பாஜகவினர் உருவாக்கி வருகிறார்கள்.
பாஜக அரசு பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டிற்கு விடமாட்டோம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் சிந்துநதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியாவிற்கு போர் தொடுப்போம் என்று சொல்லக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து தேவையில்லை ஆனால் அதற்கு ஒரு போர் தேவையா என்கிற சூழல் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சித்திரை திருவிழாவிற்கு ஊடகங்கள் பணம் கட்டி ஒளிபரப்பை பெற வேண்டும் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் அழைத்தவர், "இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் கவனத்திற்கு இது சென்று இருக்குமா என தெரியவில்லை. முதலமைச்சர் தலையிட்டு ஊடகங்களுக்கான இந்த ஜனநாயக உரிமையை பறிக்காமல் வழக்கம் போல் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊடகங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என விசிக கோரிக்கை விடுக்கிறது. ஊடகவியலாளர்களை உரிய முறைப்படி அணுக வேண்டும். அவர்களுக்கான உரிமைகளை அனுமதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையில் நடக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். கேரள வண்டிப்பெரியார் கேரளா விடுதலை சிறுத்தைகள் காட்சி சார்பில் மே தின விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.