Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை... தமிழ்நாடு அரசு விளக்கம்...

04:42 PM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதன் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்ததை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு வருகிற நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். அப்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்துறை அதிகாரிகள் என 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால், மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

Tags :
gun shotHighCourtmadras highcourtNews7Tamilnews7TamilUpdatessterliteTNGovtTuticorin
Advertisement
Next Article