Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரத் ஜோடா யாத்திரையில் ‘டூப்’ பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு - அசாம் முதலமைச்சர் பரபரப்பு தகவல்!

07:19 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது நியாய யாத்திரைக்கு `பாடி டபுள்` எனும் டூப் ஆட்களை பயன்படுத்துவதாகவும், அதன் விவரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்ததாவது:

“ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது யாத்திரையின் பல இடங்களில் ராகுல் காந்தியைப் போன்ற ஒரு நபர், ராகுலுக்குப் பதிலாக யாத்திரையில் இடம்பெற்றார். இதன்மூலம், ராகுல் காந்தி தனது யாத்திரையில் `பாடி டபுள்’ டூப் ஆட்களை பயன்படுத்துகிறார் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அசாமுக்கு பிரதமர் மோடி வரும் 4-ம் தேதி வருகிறார். அவர் வந்து சென்றதும் ராகுல் காந்தியின் `பாடி டபுள்’ யார் என்பதை நாங்கள் வெளி உலகுக்கு தெரியப்படுத்துவோம். அசாமில் யாத்திரை நடத்தியபோது ராகுல் காந்தியைப் போன்றே இருக்கும் நபர் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே வேனில் சென்றார். யாத்திரை முடிந்த நிலையில் `பாடி டபுள்’ நபர், குவாஹாட்டியிலிருந்து புறப்பட்டு, மேற்கு வங்கத்துக்குச் சென்றுவிட்டார். அவர் யாரென்பதை விரைவில் தெரிவிக்கிறோம்” இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார்.

Tags :
assamBharat Nyay YatraBJPBody DoubleCMO AssamCongressHimanta Biswa SarmaNews7Tamilnews7TamilUpdatesRahul gandhi
Advertisement
Next Article