For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எரிபொருள் கட்டணம் ரத்து: இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைப்பு!

04:51 PM Jan 05, 2024 IST | Web Editor
எரிபொருள் கட்டணம் ரத்து  இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைப்பு
Advertisement

விமான எரிபொருள் விலையின் தொடர் சரிவு காரணமாக, பயணிகளுக்கு விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Advertisement

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300, அதிகபட்சமாக 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக விமான எரிபொருள் விலையை மத்திய அரசு குறைந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இண்டிகோ நிறுவனம் தரப்பில் வெளியான அறிக்கையில், “இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, ஜனவரி 4-ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. விமான எரிபொருள் (ATF) அதிகரித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2023 இல் எரிபொருள் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏடிஎஃப் விலையின் சமீபத்திய குறைப்பு காரணமாக, இண்டிகோ கட்டணத்தை திரும்பப் பெறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement