For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்! அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்!

09:49 PM Jan 24, 2024 IST | Web Editor
கீழக்கரை ஜல்லிக்கட்டில் அசத்திய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர்  அலங்காநல்லூரில் தவறவிட்ட முதலிடத்தை தட்டிச்சென்றார்
Advertisement

கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடித்து பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் அசத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட நிலையில், கீழக்கரையில் சாதித்து மஹிந்திரா தார் ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் தட்டிச் சென்றார். 

Advertisement

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்தில் இன்று (ஜன. 24) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று மாலை நிறைவடைந்த நிலையில், அபிசித்தர் என்ற இளைஞர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

அவருக்கு ரூ.1 லட்சம் பணத்துடன், மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்தப் பரிசினை வழங்கினார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தவறவிட்ட அபிசித்தர் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தார். கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியில் தலா 6 காளைகளை அடக்கிய தமிழரசன், பரத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.

Tags :
Advertisement