For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயக்கால் நடல் நிகழ்ச்சி!

கொண்டத்துக் காளியம்மன் கோயில் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
08:58 AM Mar 29, 2025 IST | Web Editor
கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயக்கால் நடல் நிகழ்ச்சி
Advertisement

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனிமாத குண்டம் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Advertisement

இதையடுத்து ஏப்ரல் 8ம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 12-ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் கொண்டத்துக் காளியம்மன் பங்குனி மாத குண்டம் தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி திருத்தேரில் ஆயக்கால் நடல் (தேர் முகூர்த்தக்கால் நடல் ) வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அறநிலைய துறை அதிகாரிகள், கோயில் பூசாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement