For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் #Ajithkumar உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த #Aarav!

05:02 PM Aug 29, 2024 IST | Web Editor
நடிகர்  ajithkumar உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த  aarav
Advertisement

நடிகர் அஜித்குமாருடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ஆரவ் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார்.  இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.  இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.  அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர்.

இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் உள்ளிட்டோரின் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்,  அஜித்குமாருடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ஆரவ் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags :
Advertisement