Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி... புதுடெல்லியில் போட்டியிடும் கெஜ்ரிவால்!

03:46 PM Dec 15, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.

Advertisement

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளிவந்துள்ளார். பல நிபந்தனைகளால் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி. மேலும் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது எனவும், தனித்துப் போட்டி எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி, அதனைத்தொடர்ந்து சமீபத்தில் 20 பேர் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் இன்று 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், தற்போதைய முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AAPArvind KejriwalCandidates Final ListDelhi
Advertisement
Next Article