”அற்புதமான படைப்பு மாரி”... பைசன் படத்தை பாராட்டிய வைகோ..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயளாலர் வைகோ பைசன் பட இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார். அப்போது அவர் "நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார்..? என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
'நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள் “
— Mari Selvaraj (@mari_selvaraj) October 24, 2025