முதல்வரின் வெளிநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது,
”தமிழ்நாடு போதைப்பொருட்கள்நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது. இனிமேல் போதைப்பொருட்க்கு அடிமையானவர்களை திருத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. டாலர் சிட்டி என்று அழைக்கும் திருப்பூர் மாநகராட்சி இன்றைக்கு அமெரிக்க வரி விதிப்பால் தொழில் நலிவடைந்துள்ளது. ஆனால் இதனை ஸ்டாலின் செய்ய தவறிவிட்டார். திருப்பூரில் உள்ள தொழிலை சரி செய்ய முடியாத தமிழக முதல்வர வெளிநாட்டிற்கு சென்று தொழில் முன்னேற்ற செல்கிறார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். இங்கு இருக்கும் தொழில் செய்யமுடியாமல் இருக்கும் போது வெளி நாட்டில் சென்று முதலீடு ஈர்ப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.லட்சம் பேர் பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆவது அவர்களை பற்றி கவலை படாத முதல்வராக முதல்வர் இருக்கிறார். ஓட்டு போட்ட மக்களை சிந்திக்க நேரமில்லை முதல்வருக்கு. அதிமுக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பல ஆயிரம் மக்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஸ்டாலின் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் 200 கோடி முறை கேடு நடந்துள்ளது. சொத்து வரி குப்பை வரி போன்ற வரிகளில் ஊழல் செய்த அரசு திமுக அரசு.தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சாயப்பட்டறை தொழில் முடங்கிய போது வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் திருப்பூரில் 350 கோடியில் மருத்துவ கல்லூரி திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாமல் உரிய சிகிச்சை இல்லாத நிலை இருக்கிறது.
வீடு கடைகளுக்கு ஆண்டுதோறும் வரியை அதிகரித்து மக்களை வாட்டி வைத்து வருகிறது. அதே போல் மின்சார கட்டணத்தையும் அதிகரித்து மக்களை வதைக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 10ஆயிரம் அம்மா கிளினிக் அமைக்கப்படும்.பல்வேறு கோரிக்கைகளை கொடுத்துள்ளீர்கள் அதிமுக ஆட்சி வந்ததும் அனைத்தும் தீர்க்கப்படும். ஏழை,எளிய குடிசை வீட்டில் உள்ளவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்களுக்கு அரசாங்கமே இடத்தை வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 75,000 மானியம் வழங்கப்படும்”
என்று பேசி முடித்தார்.