For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்தி ஃபத்வா வழங்கியதாக பரவும் வீடியோ - #FactCheckல் போலி என நிரூபணம்!

10:00 AM Nov 15, 2024 IST | Web Editor
தனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்தி ஃபத்வா வழங்கியதாக பரவும் வீடியோ    factcheckல் போலி என நிரூபணம்
Advertisement

This news Fact checked by ‘News meter’

Advertisement

முஸ்லிம் மதகுரு ஒருவர் பெண்ணிடம் தனது மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பத்வா வழங்குவதாகவும் அதற்கு அந்த பெண் அவரை செருப்பால் அடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இந்த செய்தி குறித்த உண்மைத் தன்மையை அறிய நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

ஒரு கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பெண் ஒருவர் முஸ்லிம் மதகுருவை மீண்டும் மீண்டும் செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைப் பகிர்ந்த சமூக வலைதள பயனர்கள், பெண்ணுக்கு எதிராக ஃபத்வாவைப் பிறப்பித்ததால் அவரைத் தாக்கியதாகக் அப்பதிவில் குறிப்பிட்டுருந்தனர்.

மேலும் அப்பெண்ணின் கணவர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்த பின்னர் தனது மகனை மறுமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அப்பதிவில் இடம்பெற்றிருந்தது. நியூஸ் 24 சேனல் லோகோவுடன் 28 வினாடிகள் கொண்ட கிளிப்பில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பத்வா கொடுத்த மதகுருவை செருப்பால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த செய்தி குறித்த உண்மை தன்மையை அறிய நியூஸ்மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது.

பரவும் வீடியோ - உண்மை சரிபார்ப்பு

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் கீ ஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது செப்டம்பர் 29, 2024 அன்று இந்தியில் வெளியிடப்பட்ட நியூஸ் 24 இன் ஒரு அறிக்கையை காட்டியது. அதன்படி அதே வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் நடைபெற்றது தெரியவந்தது.

இதன்படி மதகுரு ஒருவர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து தாய் ஒருவர் அவரை செருப்பால் அடித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் தனது மகளுக்கு ஏற்பட்ட நோய்க்கு மந்திரிப்பதற்காக மதகுருவை நாடியுள்ளார். இதனையடுத்து மதுகுருவின் அறையில் அவரது மகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் இருந்ததால் சந்தேகம் அடைந்த தாய் உள்ளே நுழைந்து பார்த்தபோது தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததால் உடனே பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அங்கு அந்த தாய் சம்பந்தப்பட்ட மதகுருவை அனைவரின் முன்னிலையில் செருப்பால் அடித்துள்ளார்.

இதுகுறித்த செய்தி செப்டம்பர் 30, 2024 அன்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் "UP: Woman Beats Islamic Preacher for Allegedly in the Molesting his daughter, Video Surfaces From Moraladabad" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிற உள்ளூர் ஊடகங்களான, டிஎன்பி இந்தியா மற்றும் டிவி 9 போன்றவையும், இந்த சம்பவம் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததால் அனைவரது முன்னிலையில் அச்சிறுமியின் தாய் மதகுருவின் தாயார் தாக்கியதை உறுதிப்படுத்தியது.

எனவே, ஒரு பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் திருமணம் செய்து வைக்க ஃபத்வா வழங்கியதற்காக மெளலானா தாக்கப்பட்டார் என்ற கூற்று தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.

முடிவு :

முஸ்லிம் மதகுரு ஒருவர் பெண்ணிடம் தனது மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பத்வா வழங்குவதாகவும் அதற்கு அந்த பெண் அவரை செருப்பால் அடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ போலியானது என்றும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுருவை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ திரித்து பரப்பப்பட்டுள்ளது என்றும் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘News meter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement