For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரையில் கர்ப்பிணி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு!

04:30 PM May 21, 2024 IST | Web Editor
மதுரையில் கர்ப்பிணி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து   சிசிடிவி காட்சி வெளியீடு
Advertisement

மதுரையில் கர்ப்பிணி மீது அதிவேகமாக இயக்கப்பட்ட இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் கர்ப்பிணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அந்த பகுதியில், அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்றுள்ளனர்.  இந்த சமயத்தில், இரு சக்கர வாகனம் கர்ப்பிணி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அந்த பெண் ஒத்தக்கடை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

மதுரை ஒத்தக்கடை பகுதியில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், போக்குவரத்துக் காவல் துறையினர் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement