Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாமக இடம்பெறும் அணி மகத்தான வெற்றியை தரும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

பாமக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:55 AM Jul 11, 2025 IST | Web Editor
பாமக எந்த அணியில் இடம் பெறுகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மகத்தான வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநாட்டு மேடை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்ட அவர் அப்பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்க மேடையை இடித்து அப்புறப்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அன்புமணி தைலாபுரம் வீட்டிற்கு சென்றது குறித்த கேள்விக்கு, அவரது வீட்டிற்கு அவர் செல்கிறார் என்றார்.

பாமக எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத வெற்றி பெரும். ஏனென்றால் அப்படிபட்ட பலமான கூட்டணி. கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தீற்களா என்ற கேள்விக்கு, இனி முறையாக உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும் உங்கள் சந்தேகங்கள் போக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை விதியை எடுத்து கல்லூரி கட்டுவதை எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு, கோவில்களுக்கு சொந்தமாக நிலங்களோ, பணமோ அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது தவறில்லை என தெரிவித்தார்.

மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுப்பது குறித்த கேள்விக்கு, அதனை வலியுறுத்தி கேட்டு பெறுவோம் என்றார். அப்போது பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கம் மாநில தலைவர் பு.தா.அருள்மொழி உடனிருந்தனர்.

Tags :
AnbumaniRamadossGKManiMayiladuthuraiPMKPMK founder RamadossRamadoss
Advertisement
Next Article