பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!
Google News Initiative & FICCI இணைந்து புனேவில் நடத்திய பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வில் பங்கேற்று நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
Gni நடத்திய Indian languages Program-ல் இந்தியா முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நியூஸ் ரூம்களிலில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 323 செய்தி நிறுவனங்கள் முதல் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.
இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் app உருவாக்கத்திற்கு 100 பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 3-ஆம் கட்டத்தில் பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்த Gni நடத்திய Indian languages Program மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த மூன்று கட்டங்களுக்கும் News7Tamil தேர்வானது. இதனை தொடர்ந்து , Google News Initiative & FICCI இணைந்து பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு புனேவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற News7Tamil -ன் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இதே போன்று இந்நிகழ்ச்சியில் கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட மேலாளரான (Program Manager, Google News India ) ஷ்வேத்தா சூசன் இலியாஸ், கூகுள் இந்தியா செய்திப் பிரிவு ஒருங்கிணைப்பு மேலாளர் ( News Partner Manager, Google News India ) அபிஷேக் மாத்தூர், மீடியாலஜி சாப்ட்வேரின் நிர்வாக மேலாண் இயக்குநர் மனிஷ் திங்கிரா ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம், பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களை அதனதன் மொழியிலயே தொழில்நுட்பத்தில் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.