For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்!

09:49 AM Mar 19, 2024 IST | Web Editor
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்
Advertisement

அமெரிக்காவில், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத் கடந்த 11 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்த ஒரு காரில் இறந்து கிடந்துள்ளார். 

Advertisement

ஆந்திராவைச் சேர்ந்த பருச்சுரி சக்ரதர் ஸ்ரீலட்சுமி தம்பதியினரின் ஒரே மகனான அபிஜீத் தனது தாயாரின் எதிர்ப்பையும் மீறி,  கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த அபிஜீத்,  தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பாமகவின் முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

இந்நிலையில்,  ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து கடந்த 11 ஆம் தேதி அபிஜீத் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து,  தங்களது ஒரே மகன் மரணமடைந்த செய்தியை கேட்ட அபிஜீத்தின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  அமெரிக்காவில் மரணமடைந்த மாணவர் அபிஜீத்தின் உடல்,  குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த 15 ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டு,  அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் மாணவர் அபிஜீத்தின் மறைவு குறித்தும், இந்த வழக்கின் விசாரணை குறித்தும் நேற்று (மார்ச் 18) 'X' தளத்தில் தெரிவித்திருப்பதாவது :

"மாணவர் அபிஜீத்தின் பெற்றோர் விசாரணை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்து வருவகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் மாணவர் அபிஜீத்தின் மரணத்தில் குற்றச்செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை எனினும் விசாரணையின் முடிவில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த முழுவிவரமும் விசாரணையில் தெரிய வரும். மேலும்,  உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் 9 பேர்,  இதை போன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,  அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியதோடு மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.  அமெரிக்காவிலுள்ள 90 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர்"

இவ்வாறு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement