ஜாமினில் வெளியே வந்த கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு!
கர்நாடகாவின் ஹாவேரியில் கடந்த ஜனவரி 2024 இல் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு, ஹாவேரி செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் பிணை வழங்கியது. இந்நிலையில், பிணையில் வெளியானவர்களை ஐந்து கார்கள், பைக்குகள் மூலம் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஹாவேரி துணைச் சிறையில் தொடங்கி சிறைச்சாலையிலிருந்து சுமார் 25 கி.மீ தூரம் வரை இந்த வாகன பேரணி தொடர்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் - அஃப்தாப் சந்தனகட்டி, மதார் சாப் மண்டக்கி, சாமிவுல்லா லலனாவர், முகமது சாதிக் அகாசிமானி, ஷோயிப் முல்லா, தௌசிப் சோட்டி மற்றும் ரியாஸ் சாவிகேரி.
பாதிக்கப்பட்ட பெண் புகாரை தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் புகார் அளித்த பெண்ணை கடத்தி தாக்கியும் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளில் அடிக்கடி ஈடுப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஒரு சமூகம் இவ்வாறு வழவேற்பு அளிப்பது என்பது பெரும் மனவேதனையை உண்டாக்குகிறது.