ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பியானோ பரிசளித்த ஏ.ஆர்.ரகுமான்...!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அண்மையில் நடந்த 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருதினை பெற்றார்.
தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ். சம்யுக்தா ஆகியோர் நடித்திருந்தனர். இது ஜி.வி. பிரகாஷின் இரண்டாவது தேசிய விருது ஆகும். இதற்கு முன்பு சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2-வது முறையாக தேசிய விருது வென்றிருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு, பியானோ ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி பிரகாஷ்குமார், ”இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சர் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார். இது அவர் தானே பயன்படுத்திய பியானோ. இதை விட வேறு என்ன சிறந்த பரிசை நான் கேட்டுவிட முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.