Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தற்காலிக காய்கறி சந்தை அமைப்பதை எதிர்த்து விடிய விடிய போராட்டம்..!

10:00 AM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

மீன் சந்தையை தற்காலிக காய் கறி சந்தையாக மாற்றுவதற்கு மீனவர்கள்
எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம்,  மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மார்க்கெட்டை ரூ. 14. 60 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட மார்க்கெட் அமைப்பதற்கான பணியினை கடந்த 03 ஆம் தேதி,  தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள் : இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை - நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!

தற்போது மார்க்கெட்டில் பணியை தொடங்குவதற்காக அருகியில் உள்ள லாரி பேட்டை தற்காலிக காய்கறி சந்தையாக மாற்ற பணி நேற்று தொடங்குவதாக இருந்தது.  அந்த லாரி பேட்டையில் கடந்த சில வருடங்களாக மீன் இறக்கு தளமாக வெளியூரிலிருந்து மீன்களைக் கொண்டு வந்து இறக்கி விற்பனை செய்து வந்தனர்.  ஆனால், மீன் விற்பனைக்கு மார்க்கெட்டில் தனி மீன் சந்தை உள்ளது என குறிப்பிடத்தக்கது.


காய் கறி சந்தையில் உள்ள 45 க்கும் மேற்பட்ட கடைகளை மாற்ற குழித்துறை நகராட்சி உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5000  மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளதாக கூறி மார்த்தாண்டம் சாந்தை சாலையில் நேற்று காலை முதல் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் எம்.பி. விஜய் வசந்த் நேரில் சென்று மீனவர்களுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
#StruggleFish MarketKanyakumariMARKETmarthandamvegetable market
Advertisement
Next Article