மே தினத்தை முன்னிட்டு மதுரையில் பணியாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்- குவியும் பாராட்டு!
04:58 PM May 01, 2024 IST
|
Web Editor
அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சுற்றுலாவுக்காக அழைத்து சென்றுள்ளார். அவர்களுக்கு மூன்று வேலை உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வருகிறார். இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
மே தினத்தை முன்னிட்டு மதுரையில் தனியார் நிறுவனம் தனது பணியாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Advertisement
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அரசு நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்குமார் இந்த மே தினத்தில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல் ஒன்றை செய்துள்ளார்.
Next Article