“ஜுராசிக் வேர்ல்ட்ன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” - நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன்!
ஜுராசிக் வேர்ல்ட்-இன் அடுத்த பாகத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார்.
டேவிட் கோப் எழுதிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் காட்ஜில்லா மற்றும் ராக் ஆன். இந்த படங்களின் இயக்குநர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கவுள்ள ஜுராசிக் வேர்ல்ட் 4 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ளது. யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த ஹாலிவுட் படத்தில் ஜோனதன் பெய்லி, நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஜுராசிக் பார்க்கின் அதிதீவிரமான ரசிகை. எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது. நான் என்னுடைய சிறுவயதில் திரையரங்குகளில் பார்த்த திரைப்படத்தில் இதுவும் ஒன்று. அதனை தெளிவாக நினைவில் வைத்துள்ளேன். எனது வாழ்க்கையை மாற்றியது. நான் இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது” என தெரிவித்தார்.
கிறிஸ் ப்ராட் மற்றும் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் நடித்த ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டுள்ளது ஜுராசிக் வேர்ல்ட் 4.