சீனாவில் புதிய வகை கொரோனா - 7 பேர் பாதிப்பு..!
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மை காலமாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. JN.1 என்ற வகை கொரோனா வைரஸ் தொற்று, அந்நாட்டில் பரவி வருகிறது. இது பரவும் வேகம் மிகக் குறைவு என்றும், ஆனால் விரைவில் இதன் வேகம் உச்சம் தொடலாம் என்றும் சீன நோய் கட்டுப்பாடு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் அந்நாட்டில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : “ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுவது பிரச்னையல்ல...!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த புதிய வகை கொரோனா, கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்தியையும், உடல்நிலையையும் பொறுத்தே வெளிப்படும் என்றும், மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி JN.1 வகை கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.