Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்!.. உயிரை மாய்த்துக்கொண்ட ஐஏஎஸ் அதிகாரி மனைவி...

06:26 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்தியதாக கூறப்படும் IAS அதிகாரியின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

Advertisement

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி
ராஜலட்சுமி. இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில்
பயின்று வரும் நிலையில் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும்போது ஜூலை 11-ந்தேதி
பள்ளிக்கு சென்ற மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை பயங்கர
ஆயுதங்களை காண்பித்து கடத்தி சென்றனர்.

பின்னர் அந்த கும்பலை சே்ாந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து ரூ.
2 கோடி தர வேண்டும் என மிரட்டினர். இதுதொடர்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய 3 மணி நேரத்தில் சிறுவன், மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டனர்.

நான்கு பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் மேலும் தலைமறைவாக இருந்த
குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர், இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்பு
இருப்பதாக கருதப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா என்பவர் என்பவரை
போலீசார் தேடி வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், அவர் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் இல்லத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் தாயார் தகவல் தெரிவித்துள்ளார். 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்தியதாக கூறப்படும் IAS அதிகாரியின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 

Tags :
MaduraiStudent Kidnap Case
Advertisement
Next Article