"ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது" - ராகுல் காந்தி!
"ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், "ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
"இன்று நடைபெற்று வரும் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் INDIA கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது இதுவரை நிலவி வரும் போக்குகளில் இருந்து தெளிவாகிறது. கொளுத்தும் வெயிலிலும் பொது மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்றய வாக்களிக்க வந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது"
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.