For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நெல், கரும்பு போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
04:05 PM Sep 10, 2025 IST | Web Editor
நெல், கரும்பு போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
”பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை  நிர்ணயிக்க வேண்டும்”   அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது முந்திரி மற்றும் பலா விவசாயிகளை சந்தித்து  அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

Advertisement

பின்னர் விவசாயிகள் முன்னிலையில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

”தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 63% பேர் விவசாய மற்றும் விவசாயத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் முந்திரியில் மூன்றில் ஒரு பங்கு கடலூர் மாவட்டத்தில் சாகுபடி ஆகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது.அதில் 70 ஆயிரம் ஏக்கர் விவசாயம் முந்திரி கடலூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறுகிறது.

'ஒரு ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் முந்திரி கொட்டைகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது இறக்குமதி யார் செய்கிறார் என்று சொன்னால் கடலூர் மாவட்டத்தின் முன்னாள் எம்பி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் இறக்குமதி செய்கிறார்கள்.கடலூர் மாவட்ட உள்ளூர் விவசாயிகளை ஏமாற்றி அவர்கள் சம்பாதித்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முந்திரி விவசாயிகளுக்கு எத்தனையோ பல வாக்குறுதிகளை கொடுத்தது ஆனால் அதனை நிறைவேற்ற வில்லை. முந்திரிக்காக தனியாக மண்டலத்தை உருவாக்குவோம் வாரியத்தை அமைப்போம் என்றெல்லாம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொல்லியிருந்தார் ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

முக்கனிகளில் ஒரு கனியான பலாவும் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளைகிறது. முந்திரி, பலா போன்றவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஏராளமான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம் அவற்றை உள்ளூரிலும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் அதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். கேரளாவில் ஆராய்ச்சி செய்து பலாவிலிருந்து ஐஸ்கிரீம், ஜுஸ் உள்ளிட்ட 200 விதமான உணவுப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறார்கள். கேரளாவில் செய்யும் போது தமிழ்நாட்டில் ஏன் முடியாது?

முந்திரியால் மட்டும் அன்னிய செலாவணியாக 7000 கோடி வந்து கொண்டிருந்தது.. ஆனால் தற்போது வெறும் 2000 கோடி மட்டும் தான் வருகிறது ஏனென்றால் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முந்திரியை மதிப்பு கூட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். நெல், கரும்புக்கு உள்ளது போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்பட வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் நான்காயிரம் ஏக்கர் பலா விவசாயம் செய்யப்படுகிறது ஆனால் பலாவிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாய நிலங்களை அழித்துவிட்டு பழுப்பு நிலக்கரி எடுப்பது நியாயமா.?
பழுப்பு நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை நாசமாக்கி அதிலிருந்து மின்சாரம் எடுக்கக்கூடிய முறையை கையாள்கிறார்கள்.தற்போது அறிவியல் உலகம் எங்கோ முன்னேறிவிட்டது..சூரிய மின்சக்தி காற்றாலை மூலம் என எவ்வளவு முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் அவற்றையெல்லாம் விடுத்து விட்டு மண்ணையும் மக்களையும் நாசப்படுத்தக்கூடிய திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது.. விவசாயிகளின் விளை நிலத்தை அழித்து அதிலிருந்து பழுப்பு நிலக்கரியை எடுப்பது நியாயமா? விவசாய நிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்வீர்கள்"

என்று பேசினார்.

Tags :
Advertisement