10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்!
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ சார்பில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெறும் என்றும், ஜனவரி 30 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலமைச்சர் தங்கள் கோரிக்கைகளை பரிசீரித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்ட களத்தை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.