For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

09:25 AM Apr 06, 2024 IST | Web Editor
சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
Advertisement

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனி பிரதோஷத்தை  முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.  மகா சிவராத்திரி,  பிரதோஷம்,  பௌர்ணமி, மாத சிவராத்திரி,  சனி பிரதோஷம் உள்ளிட்ட தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பேச்சு

இதையடுத்து,  இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.  இதைடுத்து, மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  காலை 6 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இன்று முதல் வரும் 9 தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்து செல்கின்றனரா என வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை தீவிர பரிசோதனை ஈடுபட்டனர் . பின்னர் அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அதன் பின்னர் மலையேறி செல்ல அனுமதி அளித்தனர்.

Tags :
Advertisement