படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு... கார் ஓட்டுநரின் திக்... திக்... அனுபவம்!
ஓடும் காரில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பல மணி நேரம் போராடியும் பிடிக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் காரை திருப்பி அனுப்பினர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளத்தில் வீடுகளில் தண்ணீர்
புகுத்தும் ஏராளமான கார்கள் நீரில் மூழ்கியும் சேதமடைந்தன. இந்த நிலையில்
விஷப்பாம்பு புகுந்து இருப்பது தெரியாமல் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு
இளங்கோவன் காரினை எடுத்துச் சென்றார்.
இதையும் படியுங்கள்: சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்!
அப்போது காரின் முன் பகுதியில் விஷப்பாம்பு படமெடுத்து ஆடியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர் அவசர அவசரமாக காரினை பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் காரின் எஞ்சினுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்களுக்கு பல மணி நேரம் போக்கு காட்டியதால் பாம்பினை பிடிக்க முடியாமல் திணறினர். அதனைத் தொடர்ந்து பாம்பு இருப்பது தெரிந்தும் பிடிக்க முடியாததால் வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் வேறு வழி இன்றி பாம்பு பயத்திலேயே வாகன உரிமையாளர் காரை ஓட்டிச் செல்லும் பரிதாபநிலை ஏற்பட்டது.