“அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா...” - ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழக வெற்றி கழக கட்சியை நடத்தி வரும் விஜய், கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் தனது 69 படத்தில் நடிப்பதாக அறிவித்தார். கேவிஎன் புரொடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படம் விஜய்க்கு கடைசி படம் என்பதாலும் அரசியல் கதைகளத்தில் உருவாகி வருவதாக கூறப்படுவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த குடியரசு தினத்தன்று(ஜன.26) வெளியாகி படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் “நான் ஆணையிட்டால்…” என்ற எம்ஜிஆரின் பாடல் வரியும் இடம்பெற்றது.
Adiyum othaiyum kalanthu vechu vidiya vidiya virundhu vecha.. #JanaNayaganPongal 🔥
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss… pic.twitter.com/hIhBlFWVzg
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
இந்த நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டருடன் படக்குழு அறித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா...” என்ற விஜய்யின் போக்கிரி பட பாடலை பகிர்ந்து, அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.