For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அறுந்து விழுந்த மின் வயர்; மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு!

07:00 AM Jun 10, 2024 IST | Web Editor
அறுந்து விழுந்த மின் வயர்  மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு
Advertisement

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சார கம்பத்திலிருந்த வயர் அறுந்து 16 வயது
பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே N. சண்முக சுந்தராபுரம் பகுதியைச்
சேர்ந்த கருத்தபாண்டி பானுமதி தம்பதியினர்.கருத்தபாண்டி கூலி வேலை செய்து
வருகிறார் இவரது மகள் ஏஞ்சல் வயது 16 ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள திருவிக அரசு
மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பன்னிரண்டாம்
வகுப்பு செல்ல உள்ளார்.

இந்நிலையில் மாணவி ஏஞ்சல் N. சண்முக சுந்தராபுரத்தில் உள்ள தண்ணீர் குழாயில் துணி துவைத்து கொண்டிருந்த போது அவரது தலைக்கு மேல் சென்ற மின்சார கம்பத்தின் வயர் அறுந்து மாணவி மீது விழுந்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருகே இருந்தவர்கள் மின்சார வயரினுள் சிக்கிய மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்த நிலையில் மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்து உடற்கூறு ஆய்விற்காக வைத்துள்ளனர்.

N.சண்முக சுந்தராபுரம் பகுதியில் இருக்கும் கொடிக்கம்பங்களில் மின்சார வயர்
தாழ்வாகச் செல்வதாகவும், அருந்து விழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சாரக் கம்பிகள்
இருப்பதாகவும் அதை சரி செய்ய பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளை பள்ளி திறக்க உள்ள நிலையில் நன்றாகப் படித்து விளையாட்டுப் போட்டிகளில்
முதலிடம் பெறும் மாணவி ஏஞ்சல் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் மின் வயர்
அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
உள்ளது.

Tags :
Advertisement