காவல் நிலைய மேற்கூரையில் ஓய்வெடுத்த காளை - வைரலாகும் வீடியோ!
உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தின் மேற்கூரையில் காளை ஓய்வெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள சலோன் காவல் நிலையத்தின் மேற்கூரையில் காளை மாடு ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. இதனை அறியாத காவல்துறையினர் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். காவல் நிலையத்தின் மேற்கூரையில் காளை படுத்திருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையம் அருகில் திரண்டனர். இதன் பிறகு காவல்துறையினர் காளையை பற்றி அறிந்தனர். தொடர்ந்து காளையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். காளையை மீட்க போலீசார் சில மணி நேரம் போராடினர்.
காளையை மீட்கும் முயற்சியில் போலீசார் கையில் தடியடியுடன் வந்தனர். போலீசார் காளையை நெருங்கியதும், காளை பீதியடைந்தது. இதனால் காளை காவல் நிலையத்தின் மேற்கூரையிலிருந்து அருகில் இருந்த வீட்டின் கொட்டகையின் மேல் தவறி விழுந்தது. இதில் அந்த காளை பலத்த காயமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
காளை எப்படி காவல்நிலையத்தின் மேற்கூரைக்கு சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவல் நிலையத்தின மேற்கூரையில் காளை ஓய்வெடுப்பது தெரிகிறது.
रायबरेली --- आवारा सांड चढ़ा पुलिस चौकी की छत पर
चौकी में तैनात पुलिस कर्मियों में मचा हड़कंप
वीडियो व फ़ोटो सोशल मीडिया पर हुआ वायरल
सलोन कोतवाली क्षेत्र के सूची चौकी का मामला #Raebareli #viral pic.twitter.com/YD1qeFEzoB
— RahulPathak1989 (@Chupachehra1989) July 10, 2024