தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்வா (15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விஷ்வா தனது தந்தை மற்றும் உறவினர்களான சுந்தரபாண்டி, கவி உள்ளிட்டோருடன் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள் : தூக்கில் தொங்கிய பேரன்.. முட்புதரில் கிடந்த பாட்டி – சென்னையில் அதிர்ச்சி!
மூன்றாவது மலையில் இறங்கிக்கொண்டிருந்தபோது விஷ்வா திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் விஷ்வாவை உடனடியாக டோலி மூலம் அடிவாரத்திற்குக் அழைத்து வந்து மருத்துவர்களிடம் காட்டினர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளயங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.