ஆண் குழந்தை ரூ.15 லட்சம்; பெண் குழந்தை ரூ.10 லட்சம்; குழந்தை கடத்தல் கும்பல் பேசிய அதிர்ச்சி ஆடியோ!
சென்னை புழல் பகுதியில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வித்யா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், புழல் காவல்துறையினர் மூன்று குழந்தைகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கும்பல் குழந்தைகளை விற்பனை செய்வதற்கு லட்சக்கணக்கில் பேரம் பேசியுள்ளது. குறிப்பாக, ஆண் குழந்தைகள் ரூ.15 லட்சத்திற்கும், பெண் குழந்தைகள் ரூ.10 லட்சத்திற்கும் விலை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேரம்பேசல்களைக் கொண்ட ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் வித்யா என்ற பெண் கைது செய்யப்பட்டு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெரிய அளவிலான குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சென்னை காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.