“சீமானுக்கு கருப்பு சட்டை மட்டும் செட் ஆகாது” - இயக்குநர் பேரரசு!
இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கத்தில், நடிகை தேவயானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நிழற்குடை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள்
பாக்யராஜ், செல்வமணி, பேரரசு, நடிகர் நகுல், நடிகைகள் நமிதா, வனிதா விஜயகுமார் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு,
“சீமானை கொஞ்ச நாட்களாக கருப்பு சட்டையில் பார்த்தபோது வருத்தமடைந்தேன். இப்போது வெள்ளைக்கு மாறியுள்ளார். சீமான் வெள்ளைச் சட்டையில் அழகாக இருக்கிறார். கருப்பைத் தவிர மஞ்சள், பச்சை, சிவப்பு என எந்த நிறத்தில் வேண்டுமானாலும் சட்டை போடுங்கள். கருப்பு மட்டும்
வேண்டாம். அது உங்களுக்கு பொருந்தவில்லை. காவிச் சட்டை போட வேண்டாம். பிங்க் கலர் சட்டை போடுங்கள்.
தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான டென்ஷன் இருக்கும். ஆனால் சீமானுக்கு அந்த கவலையில்லை. எந்தக் கூட்டணியும் அமைப்பதில்லை. என்னதான் அரசியலுக்கு போனாலும், சீமானுக்கு சினிமா தான் தாய் வீடு. தேவயானி இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராகாமல் இயக்குகிறார். விரைவில் உறுப்பினராகுங்கள், இயக்குனர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறார்கள்” எனப் பேசினார்.